காவியா,
அம்மா…….காவியா?
எங்கடா இருக்க?
வினாவினை தொடுத்த வாரே சதாசிவம் உள்ளே நுழைந்தார்.
என்னப்பா?
பயங்கர சந்தோஷமா இருக்கீங்க போல……….
ஆமாம் டா !,.நல்ல விஷயம் தான், .இப்பதான் தரகர் போன் பண்ணார்.உனக்கு ஏத்த நல்ல வரன் பாத்துட்ட தாகவும் ,இப்பவே ஃஅந்த பையனின் போட்டோ வோட வருவதாகவும் சொன்னார்.அதான்.
என்னடா…….
ஒன்னும் பதிலே பேச மாட்டீங்கிற?
இல்லப் பா, இவ்வளவு சீக்கிறமா உங்கள விட்டு போகனுமா?நானும் போயிட்டா யாருப்பா உங்கள பாத்துக்குவா?
என்னால உங்கள விட்டு போக முடியாது.கண்களில் கண்ணீர் மெல்ல எட்டி பார்க்கும் நிலையில் காவியா தழுதழுத்த குரலில் சொன்னாள்.
என்னடா!
அப்பா உயிரோட இருப்பதே உனக்காகதான்! .இல்லாட்டி உன் அம்மா போன உடனே நானும் போயிருப்பேன்.,
இன்பத்தையும் ,துன்பத்தையும் பகிர்ந்துக்க கண்டிப்பா ஒரு துணை வேனும்.அதோட அருமை எனக்கு மட்டும் தான் தெரியும்.அப்பா கண்ண மூடுறதுக்குள்ள உங்கலியாணத்த பாத்தரனும்.
விடுங்கப் பா!பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு!என்குழந்த கல்யாணமே உங்க தலைமையில தான் நடக்க போகுது!காவியா சொல்ல
ஆமாம்-” “”””””””””ஆசை இருக்கு தாசில் பண்ண!அதிஷ்டம் இருக்கு மாடு மேயிக்க!’’’’’’’’’’’போமா! அதுவரைக்கும் நான் இருந்தா பாப்போம்.போடா!என்று சொல்லி சோபாவில் சாய்ந்தார்.
”டிங்-டாங்’” அழைப்பு மணி ஒலித்தது!
கதவை திறந்தவாறே,,,
வாங்க தரகர் ஐயா!வாங்க.
என அழைத்துக் கொண்டு உள்ளே போனார் சதாசிவம்.
வாங்க அங்கிள்
நல்லா இருக்கேங்களா?
எதாவது குடிக்க கொண்டு வரவா?புன்முறுவலுடன் கேட்டாள் காவியா!
ஏதும் வேண்ணாம்மா!கல்யாணம் முடியட்டும் விருந்தே சாப்பிடுறனேன்!
ஆமாம் நேரில் விவரம் சொல்றேன்னு சொன்னீங்க
யென ஆரம்பித்தார் சதாசிவம்!
ஆமா!ஆமா!அருமையான ஒரு வரன் வந்திருக்கு!உங்க தகுதிக்கும்,மதிப்புக்கும் வசதிக்கும் ஏற்ற குடும்பம்.
ஆமா!அவ்வளவு வசதி இருந்தா ஏன் இப்படி என் பொண்ணு சம்பாரிச்சு குடும்பத்த காப்பாத்த போகுது!
அட விடுங்க சார்.
நான் நேரா விஷயத்துக்கு வரேன்.
மாப்பிள்ள பேரு-கதிர்.
ஊரு-சென்னை,
நல்லா படுச்சு இருக்காரு!
இப்போ ஒரு தனியார் கம்பெனியில உதவி –மேனேஜரா இருக்காரு!
மாசம்-35000/ சம்பளம்.
எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.அம்மா பிள்ள!
ஒரே பையன்!
எந்த பிச்சு பிடுங்கலும் இல்ல.
தாராளமா பேசி முடிக்கலாம்.
உங்கள பத்தியும் அவங்க கிட்ட சொல்லிட்டேன்.ஒரே பொண்ணு!!2வீடு இருக்கு!இப்பவே குடும்ப பொறுப்பு எல்லாம் அதுதான் பாத்துக்குது!நல்லா படிச்ச பொறுப்பான புள்ள.இந்த காலத்தில இப்படி ஒரு பொண்ணு கிடைக்க கசக்குமா?என்ன?
அவங்க ரொம்ப பிரிய படுறாங்க.என்ன சொல்லுறீங்க!
தரகர் சதாசிவத்தின் பதிலுக்காய் காத்திருந்தார்!
இல்ல தரகரே!
இது மார்கழி மாசம்!தை !பொறக்கட்டும்.!பாக்கலாம்!
நானும்!
பாப்பாகிட்ட கொஞ்சம் பேசிட்டு சொல்ரேன். என்றார் சதாசிவம்.
சரி சார்!பாருங்க!
நல்ல சம்மந்தம் கை கூடி வரும் போதே முடிச்சாதான் உண்டு!
நீங்க-சொல்லுரதும் சரிதான்.
சரி
தை வரட்டும் பேசி முடிச்சறலாம்!
சரி-அப்ப நான் கிளம்புறேன்!
அம்மாடி காவியா- இந்தா மாப்பிள்ள போட்டோ.
வாங்கிக்க,
அப்பதான் சரின்னு சொல்லியாச்சு.
எனச் சொல்லி காவியாவிடம் மாப்பிள்ளை போட்டோவை கொடுத்தார்,
இல்ல அங்கிள்
அப்பா கிட்ட கொடுங்க,
அப்பா சொன்னா சரிதான்.எனச்சொல்லி உள்ளே போனாள் காவியா!
சும்மா…ராஜா மாதிரி இருக்காரு!இந்தாம்மா…….
பாரு!அப்பா சொல்றதுக்காக வேண்டாம்!உனக்கு பிடுச்சுருந்தா
சீக்கிறமே முடிச்சரலாம்.
நான் அப்பறமா பாத்துக்கிறேன்! என சொல்லி தலைக்குனிந்தாள்.மலரின் அரும்பு நிலைப்போல அவளின் இதழும் மலர்ந்தது!
அட……..
வெக்கத்த பாரு!
சரி நான் போய் பால் கார்டுக்கு கேட்டுட்டு வரேன்என்று எழுந்து போனார் சதாசிவம்.
சோபா மேல் இருந்த கதிரின் புகைப்படம் அவளை வரச்சொல்லி அழைத்தது!
கையில் எடுத்தாள்!பார்த்த நொடி
அப்படி ஒரு பரவசம்.நல்ல ஆஜானு பாகுவான ,உடல்வாக்கு.கருப்பு நிறம் ஆனால் கலையான முகம்……
நல்லாதான் இருக்கார்.
மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்…..
அலைப்பேசி எடுத்து வித்யா எங்க இருக்க?
வரேன் சொன்ன,எப்ப வர?
உன்கிட்ட ஒன்னு சொல்லனும்
உடனே வா….
என தன் உயிர்த்தோழியை வரச்சொல்லி அலைப்பேசியின் மூலம் கோரிக்கை வைத்தாள்.
காவியா,,,
வாங்க மேடம்…
இப்ப தான் வழி தெரிஞ்சதா?
பொய்கோபத்துடன் வித்யாவை வரவேற்றாள்….
இல்லடா!
கொஞ்சம் வேல….
நம்பிட்டேன்……….வா!
அழைத்துக்கொண்டு உள்ளே போனாள்..
என்னடி முக்கியமான விஷயம்….நீ சரியில்லையே!பயங்கற சந்தோஷமா இருக்கப்போல……………..வித்யா வம்பிழுத்தாள்….
ஆமாம் ஒன்னு இருக்கு !ஆனா சொன்னா நீ ரொம்ப கலாய்க்க கூடாது!
சொல்லிக்கொண்டே….
கதிரின் புகைப்படத்தை காட்டினாள்
அடிப்பாவி….சொல்லவே இல்ல…
சீ!நீ நினைக்கற மாதிரி ஒன்னும் இல்ல.இந்த பையன் போட்டோவ இப்பத்தான் தரகர் கொடுத்தார்.நல்ல குடும்பமா,,,,சொல்றாங்க….
அதான்…அப்பாவுக்கும் பிடுச்சுருக்கு!
அப்பாவுக்கு சரி உனக்கு பிடுச்சுருக்கா?வித்யா கேட்க…
போடி!என்ற ஒற்றைவார்த்தையில் தன் சம்மதத்தை மறைமுகமாய் தோழிக்கு சொல்லிவிட்டு சோபாவில் அமர்ந்தாள்.
உன்ன விட கொஞ்சம் அழகு கம்மிதான் இல்ல……
கருப்பு வேற….
ஆனா பாக்க நல்லாதான் இருக்கான்……
வித்யா அவளிடம் சொல்ல ,அவன் இவன்னு சொன்னா மரியாத கெட்டுடும்,பாத்தது போதும்….போட்டோவ கொடு!
பிடுங்கி வைத்தாள்.
பாத்துமா….பாத்து!இப்பவே இப்டி இருக்கு இன்னும் முடிவுஆச்சுனா என்ன யாருன்னு கேப்ப போல…..சரி சரி நல்லாஇருந்தா சரி….
நான் கிளம்பரேன்….
இப்ப தான வந்த ,உடனே கிளம்புற….
அப்பறம் போலாம்.இரு!காவியா விட மறுத்தாள்…..
இல்லடா!நான் அப்பறமா வரேன்.நீ சொன்னவுடனே வந்துட்டேன்.அப்பறமா மீட் பண்ணலாம்…விடைப்பெற்றுக்கொண்டு சென்றுவிட்டாள்……….
சாமி அறையில் இருந்த தன் அம்மாவின் புகைப்படத்திற்கு அருகே சென்று…..
அம்மா!உனக்கு பிடுச்சுருக்கா!
நீ!இருந்தா இப்ப எவ்வளவு நல்லா இருக்கும்?பயமா இருக்குமா!புது குடும்பம்!புது சூழல்!நீ தான் எப்பவும் எனக்கு துணையா இருக்கனும்….சரியா!
என்று சொல்லி….தன் அன்னையின் நினைவில் மூழ்கினாள்!
ஒருவாரம் உருண்டாடியது!
அப்பா! ஆபிஸ்ல டிப்டீசன்ல பதினஞ்சு நாள் சென்னை போக சொல்றாங்க!...நான் போகனும்.!உங்கள விட்டு எப்படி போகறதுன்னு தெரியல.எவ்வளவோ சொல்லி பாத்தேன் கேட்க மாட்டீங்கறாங்க…..!
15 நாள் தான,நான் பாத்துக்கிறேன்!
இதுக்கே கவல பட்டா கல்யாணம் ஆகி போகும் போது என்ன செய்ய போற?
நிம்மதியா போ!
தங்க எல்லாம் பாதுகாப்பான இடம் தானே?பாத்துக்கம்மா/!காலம் கெட்டுகிடக்கு!சதாசிவம் சொல்ல……….
நம்ப வித்யாவோட அக்கா கூட தங்கலாம்னு இருக்கேன்!
ஆமாம்!ஆமாம்!ஏதோ ஐஞ்சு ஆறு பேரு சேர்ந்து தங்கி இருக்காங்க,வடைகைக்கு வீடு எடுத்துன்னு சொல்லுச்சு!
ஆமாம் !பா!அங்க தான்!
பாதுகாப்பான இடம் தான்!ஒன்னும் பிரச்சன இல்ல!
சரிம்மா!எப்ப போகனும்!
நாளைக்கு பா!
நாளக்கே வா!........போயிட்டு வா!பதினஞ்சு நாள்ள வந்திருவேல………
தரகர் தை மாசம் வந்ததும் அவங்கள கூட்டிட்டு வந்துடுவாரு !
வந்துருவேன்……..!
மறுநாள்…..
சென்னைக்கு போனாள்………!
இதுதான் இனி நான் வாழ போற ஊரு!
மனதிற்குள் சொல்லி கொண்டாள்!தோழியின் அக்கா வீட்டிற்கு சென்று அலுவலகம் போவதற்கான வழித்தடங்களை கேட்டுக்கொண்டு அங்கே செல்லும் பேருந்தில் ஏறினாள்………
பலவித மனிதர்கள்….,பல வித காட்சிகளை கண்ட வாறே பயணித்துக்கொண்டிருந்த காவியாவை யாரோ உற்று நோக்குவதாயாய் ஒரு உள் உணர்வு சொல்லிற்று!
திரும்பி பார்த்தாள்………
கதிர்!
கதிர்! அவரே தான்!
மனம் குதூகலித்தது………….!
இவளைப் பார்த்து புன்னகைத்தான்…..!அவளும் சிரித்தாள்!
உடன் இருந்த தோழர்கள் அவனை கைகுலுக்கி ஆரவாரம் செய்தனர்……!
ஒருவேளை நம் போட்டோவை பாத்து இருப்பாரோ?
அதான்………!மனதிற்குள்ளேயே சொல்லி கொண்டாள்!
நொடிக்கு ஒரு முறை பார்ப்பதும் ,பின் திரும்புவதுமாய் அந்த பேருந்து பயணம் முடிந்தது!
அலுவலகத்தில் அவளால் வேலை செய்யவே முடிய வில்லை .அவன் பார்த்த பார்வை இவளுக்குள் ஏதோ செய்துக்கொண்டே இருந்தது!
மாலை தன் தோழிக்கு போன் செய்தாள்…….!
வித்யா……..
என்னடி!பத்திரமா போய்ட்டயா?
வீடு வசதியா இருக்கா?
போயிட்டு வர ஒன்னும் சிரமம் இல்லையே?
காவியா?
என்ன பதிலே காணேம்…….!லையன்ல இருக்கையா?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!
என்ன ஆச்சு!
நான் கேட்டுகிட்டே இருக்க்கேன் பதிலே வரல.
நான் பாத்தேன் டி!
யார?
அவர?
அவரையா?எவர?
கதிர!
யாரு உனக்கு பாத்திருக்கும் அந்த பையனா?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!
ஏய்!சூப்பர் டா!
எப்போ?எப்படி பார்த்த?
பஸ்ஸூல!யாரோ விடாம பாக்கற மாதிரி இருந்தது.பார்த்தா அவர்!
அவரு!மரியாத..!மேல சொல்லு !
பாத்த உடனே சிரிச்சார்!நானும் பதிலுக்கு சிரிச்சேன்!
என்ன போட்டோல பாத்துப்பாருல்ல……..
உடனே அடையாளம் தெரிஞ்சுருக்கும்………!காவியா சொன்னாள்!
பாருப்பா!
வரப்போற மனைவிய போற இடம் வரைக்கும் பத்திரமா விட்டுட்டு வர செக்யூரிட்டி வேலய பாக்குறாரு இப்பவே!வித்யா பதில் சொல்ல
சிரித்தாள்!
சரி!அப்ப !அம்மா சென்னையை விட்டு வரவே மாட்டீங்க!
ஏய்!சும்மா இரு!அப்பாவ பாத்தையா?
ம்!இப்பதான் சாப்பாடு கொடுத்துட்டு வரேன்!
உனக்கு ஏன் டா!சிரமம்?
அதெல்லாம் ஒன்னும் இல்ல…….!
சரி! பாத்துக்கோ?
வித்யா?
என்னடா?
சொல்ல தெரியல!மனசுக்குள்ள ஏதோ செய்யுது?
அப்ப!உனக்கும் அந்த வியாதி வந்துருச்சு!
என்ன வியாதி?
காதல் வியாதி!
அப்படிதான் நினைக்கிறேன்!
அடிப்பாவி!அந்த அளவுக்கு வந்தாச்சா?நடத்து!நடத்து!
இனைப்பை துண்டித்தாள் வித்யா!
மறுநாளும் கதிரை கண்டாள்! அந்த பயணத்தின் போ து அவ்வபோது இயல்பான பேச்சை தொடர்ந்தான்!
இப்படியே நாட்கள் கழிந்தது!
ஒருநாள் அவன் வரவில்லை!
பரிதவித்து போனாள்!அடுத்த நிறுத்தத்தில் ஏறினான்!இவள் பரிதவிப்பு நண்பர்களின் மூலம் குறுஞ்செய்தியாக அனுப்பபட்டது!
அடுத்த நிறுத்ததில் இவள் பரிதவிப்பை ரசித்தவாறே அவசர அவசரமாய் உள்ளே நுழைந்தான்.
வந்தவன் இவள் அருகே வந்தான்.இவள் அருகே இருக்கையில் அமர்ந்தான்.கையை தொட்டு!சில சில்மிஷம் செய்தான்.தடுக்க சொல்லி மூளை உத்தரவிட்டது!வேணாம் என்று மனது மறுத்துக்கொண்டிருந்தது!
சட்டென விலகினாள்………..!
அவன் உடனே எழுந்தான்!
போய்!நண்பர்கள் அரட்டைஉடன் பாத்து பாத்து விம்மினான்!
அவன் பார்வை காதல் தாண்டி காமத்தை நோக்கியதாக இருப்பதை அவளால் உணர முடிந்தது!
மீண்டும் வீடு செல்லும் வரை அதை மட்டுமே யோசித்துக்கொண்டிருந்தாள்!எதுவாகினும் திருமணத்திற்கு பின் தான் !சொல்லி விட வேண்டும்!மனதில் உறுதி எடுத்தாள்!
தீடிரென அலுவலக பணி முடிந்ததாகவும்,மதுரைக்கே மீண்டும் செல்ல வேண்டியும் உத்தரவு வந்தது!
அன்றிரவே பேருந்தில் புறப்பட்டாள்!கதிரின் நினைவு அவளை தொடர்ந்து பின் தொடர்ந்தது!
சொல்லாமல்லே வந்துட்டோம்!
சரி!இன்னும் கொஞ்ச நாள்ல வரப்போறாரு!அப்பறம் அவரோடையே கூட்டிக்கிட்டு போக போறாரு!1வாரம் வராம என்ன தவிக்க விட்டாரு இல்ல!தவிக்கட்டும்!அப்பத்தான் என் வேதனை புரியும்!மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்!
!சரி !
தூக்கத்தில் ஆழ்ந்தாள்………….!
காவியா குட்டி!
வாட!
ஒன்ன பாக்காம இருக்கவே முடியல……….!
சதாசிவம் ஆதங்கத்தை கொட்டினார்!
என்னப்பா!சொன்னத விட சீக்கிறம் வந்துட்டேன்.அப்பறம் என்ன?
சரி! இருங்க காபி போட்டு தரேன்……..
உள்ளே போனாள்!
காப்பி கப்புடன் வந்த காவியாவிடம் சென்னையை பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தார்.
காவியாவும் கதிரை பேருந்தில் பார்த்த விவரத்தையும் சொன்னாள்!
அப்ப அவருக்கும் உன்ன பிடுச்சுருக்கு!அப்படிதான?
தெரியலப்பா!
நானா பேச பயமாவும்,தயக்கமாவும் இருந்துச்சு!அதான்!
விடும்மா! இன்னும் ஒரு வாரத்துல்ல வந்துடுவாங்க!அப்பறம் பேசிகிட்டே இருக்கலாம்!
பாப்போம்!நான் ஆபிஸூக்கு கிளம்பறேன்ப்பா!
வாரம் உருண்டோடியது!
தரகர் அழைத்தார்!அவங்க எப்ப வரலாம்னு கேட்குறாங்க!
என்ன தரகரே!நான் தான் அப்பவே சொன்னேனே!நாளைக்கே வரச்சொல்லுங்க!உடனே நிச்சியமும் பண்ணிடலாம்!
சரி!சார்!.நான் உடனே வர சொல்லிடுறனேன்.!
காவியாம்மா!தரகர் நாளைக்கு மாப்பிள்ல வீட்டுகாரங்க வரத,சொல்லிட்டு போனாரு!
வா!கொஞ்சம் கடைக்கு போய்ட்டு வரலாம்!
மறுநாள்-
சாதாரண புடைவையிலேயே அழகா இருக்கேன்னு ஜாடமாடையா பிரண்ஸ்கிட்ட சொன்னாரு!இப்ப பட்டு புடைவையில பாத்தா அசந்துடுவாரு!மனதிற்குள் சொல்லிகொண்டாள்!
காரின் சத்தம் அவர்கள் வந்ததை மறைமுகமாய் சொல்லிற்று!
சதாசிவம்!ஒடி வந்தார்.
வாங்க!வாங்க!வரவேற்று உள்ளே அழைத்தார்!
தரகர் அறிமுக படுத்தினார்!
உங்க பையன் போட்டோல பாத்ததோட நேர்ல ரொம்பவே நல்லா இருக்காரு!சதாசிவம் பேச்சுகொடுத்துக்கொண்டே இருந்தார்!
சரி! பேசிகிட்டே இருந்தா எப்படி?
நேரமாகுது!பொண்ண வர சொல்லுங்க!
மாப்பிள்ளை வெயிட் பண்ணறாரு!
இந்தோ!
வித்யா! காவியாவ வரசொல்லும்மா!
அதிக கனவுகளுடனும்,காதலுடனும் அடிமேல் அடிவைத்து அன்னம் போல் நடந்து வந்தாள்!
அவளைப்பார்த்த நொடி,,,,,,,,,,
சட்டென எழுந்தான்……..!
அம்மா வாங்க போகலாம்!கதிர் சொல்லி கிளம்ப ஆயத்தமானான்!
இருங்க!
இப்படி காரணம் சொல்லாம ,போனா எப்படி?
தரகர் விளக்கம் கேட்க!
அந்த நொடி அஸ்தமித்து போனாள்!உலகமே இருண்டதாய் தோன்றிற்று!காவியாவிற்கு!
கதிர் அம்மா காதில் ஏதோ முணுமுணு
த்தான்!
கதிரின் அம்மா!
என்ன தரகரே!
ரொம்ப நல்ல குடும்பம்னு சொல்லி கூட்டிட்டு வந்து,நல்ல வேள ,தப்பிச்சோம்!கேவலமான பார்வையுடனும், திமிரான பேச்சுடனும் பேசினாள்!
சதாசிவம் பொறுமை இழந்து !அம்மா!
கொஞ்சம் !நிறுத்துங்கள்!ஒண்ணுமே புரியல !என்ன சொல்றிங்க ?கேள்வி கேட்டார் !
இப்படி ஒரு பிள்ளைய பெத்து வளத்ததற்கு ,உங்களுக்கு பதில் வேற சொல்லனும்மா?
உங்க ஆச பொண்ணு! ஊர் மேஞ்சுட்டு வந்து !இப்ப ஒன்னும் தெரியாத மாதிரி நிக்குறா?
போதும்மா!என் வீட்டுக்கு வந்து என் பொண்ணையே கேவலமா பேசுறீங்க!தரகரே!என்ன இது?சதாசிவம் கலவரப்பட்டார் !
இருங்க சார் !பேசிக்கலாம்! தரகர் சமாதனம் செய்து வைத்தார் !
என்னம்மா?சொல்றத தெளிவா சொல்லுங்க!தரகர் கோபபட்டார்,
இந்த பொண்ணு கொஞ்ச நாளைக்கு முன்னாடி என் பையனோட நண்பன் கூட சுத்துச்சாம்!
பஸ்ஸுன்னு கூட பாக்காம…….
சே!என் வாயால அத வேற சொல்லனும்மா? நல்ல வேள உங்க பொண்ணு போட்டோவ கதிர்கிட்ட காட்டல.காட்டி இருந்தா என் பையன் இவள நினச்சு,தவிச்சுருப்பான்.நல்ல வேள ! கதிரின் தாயார் கர்ஜித்தாள்!
சக்தி காளி வடிவம் கொண்ட மாதிரி வெகுண்டெழுந்தாள் காவியா!
சட்டென போய் அவன் சட்டையை பிடித்தாள்!
நானா?உன் பின்னாடி வந்தேன்!
அம்மா!வாங்க போலாம்!கதிர் அவசரப்படுத்தினான்.
டேய்!நில்லு!
அம்மா!உங்க பையன் சொன்னது சரிதான்!
ஆனா!பாத்து வழிஞ்சது உங்க பையன்!
உங்க பையன் போட்டோவ தரகர் காட்டினார்!
நான் சென்னைக்கு போகும் போது தற்செயலாதான் உங்க பையன பாத்தேன்!வச்சக்கண் வாங்காம பாத்து,கேவலமா பேசினது உங்க பிள்ள தான்!
நான் தான் தப்பா புருஞ்சுகிட்டேன்!என்ன போல உங்க பிள்ளையும் என்ன போட்டோல பாத்து இருப்பாருன்னு நினைச்சு அவர் வழிஞ்ச வழிசலுக்கு இடம் கொடுத்துட்டேன்!
நல்ல வேள !ஏதோ கடவுள் காப்பாத்திட்டாரு!
உங்க பையன் போல ஒருத்தன் கிட்ட வாழுறதுக்கு ஆயுசு முழுக்க கன்னியாவே இருக்கலாம்!யாருன்னு தெரியாமலே ஒரு பொண்ணுகிட்ட கேவலமா நடந்துகிட்ட இவன் என்ன பத்தி சொல்ல ஒரு தகுதியும் இல்ல !
ஒரு பொண்ணு யாரோட வேனும்னாலும் வாழுவா!
சந்தேகப்படுபவனோடையும்!பொம்பள பொருக்கி உடனும் வாழவே மாட்டா!
இப்ப சொல்றேன்!உங்க பிள்ள என்ன வேணாம்னு சொல்றது!
நான் சொல்றேன்!இந்த மாதிரி ஒருத்தனோட வாழவே முடியாது!
”””””””””””””உங்களுக்கு எல்லாம் பொண்ணுங்கள பாத்தா,
எப்படி தெரியுது!
வெறும் அழகுக்காக மட்டும் எங்கள படைக்கல!
சும்மா! இருக்கற பொண்ணுங்கள பாப்பீங்க!பின்னாடியே வருவீங்க!சில்மிஷம் எல்லாம் பண்ணுவீங்க!ஆனா! உங்களுக்கு வர போறவ மட்டும் சுத்த தங்கமா இருக்கனும்!ஒரு பொண்ணு சிரிச்சு பேசினாலே! அவ தப்பானவ?
அவள தப்பு பண்ண வைக்கிற நீங்க பெரிய மனுசங்க!””””””””’
மரியாதையா!என் வீட்ட விட்டு போங்க!
சொல்லிவிட்டு உள்ளே போனாள்…………!
தன் மகளை பெருமிதத்துடன் பார்த்தார் சதாசிவம்!
விடு!
காவியாவின் தோளை தொட்டு வித்யா ஆறுதல் சொன்னாள்………….!
நான் கவல படல…………!
என் வாழ்க்கை உனக்கும் ஒரு பாடம்.
யாரையும் நம்பி!ஏமாறாதே!
காவியா!கனத்த மனத்துடன் உள்ளே போனாள்!
Comentarios