கண்கள் எங்கே ...நெஞ்சமும் எங்கே ...
கண்டபோதே.. சென்றன அங்கே ...
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே
கால்கள் இங்கே மேனியும் இங்கே
கால்கள் இங்கே மேனியும் இங்கே
காவலின்றி வந்தன இங்கே ஆஅ ஆஅ ...
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே
மணி கொண்ட கரமொன்று
அனல் கொண்டு வெடிக்கும்
அனல் கொண்டு வெடிக்கும்
மணி கொண்ட கரமொன்று
அனல் கொண்டு வெடிக்கும்
அனல் கொண்டு வெடிக்கும்
மலர் போன்ற இதழின்று
பனி கண்டு துடிக்கும்
மலர் போன்ற இதழின்று
பனி கண்டு துடிக்கும்
துணை கொள்ள அவனின்றித் தனியாக நடிக்கும்
துயிலாத பெண்மைக்கு
ஏனிந்த மயக்கம் ஆஅ ஆஅ...
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே..
கண்கள் எங்கே......
இனமென்ன குலமென்ன குணமென்ன அறியேன்
குணமென்ன அறியேன்
ஈடொன்றும் கேளாமல் எனையங்கு கொடுத்தேன்
கொடை கொண்ட மதயானை உயிர் கொண்டு நடந்தான்
குறைகொண்ட உடலோடு
நானிங்கு மெலிந்தேன் ஆஅ ஆஅ...
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே
கண்கள் எங்கே....
படம் - கர்ணன்
இசை – எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி
நடிகர்கள்-சிவாஜிகணேசன்-தேவிகா
பாடியவர்-பி.சுசீலா
பாடல்ஆசிரியர்- கண்ணதாசன்
வருடம் -14 jan 1964
コメント