கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன் பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன் பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன் பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன் சென்ற இடம் காணேன் சிந்தை வாடலானேன் சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன் சென்ற இடம் காணேன் சிந்தை வாடலானேன் சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே கணையாழி இங்கே மணவாளன் அங்கே காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே கணையாழி இங்கே மணவாளன் அங்கே காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
One of the melodious romantic hits of P Susheela,"Kangal Irandum" from the film Mannadhi Mannan. Cast: MGR, Anjali Devi, Padmini Music: Viswanathan Ramamoorthy Lyrics: Kannadasan Director: M Natesan Producer: M Natesan Release: 19 October 1960
Comments