{ சொன்னது நீதானா } (2) சொல் சொல் சொல் என்னுயிரே
சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
{ சம்மதம் தானா } (2) { ஏன் ஏன் ஏன் என்னுயிரே } (2)
சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
இன்னொரு கைகளிலே யார் யார் நானா என்னை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே
சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
{ மங்கள மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே
மணமகளை திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே } (2)
என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே
இறுதி வரை துணையிருப்பேன் என்றதும் நீதானே
இன்று சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
{ தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா } (2)
ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா
இன்னொரு கைகளிலே
Composed by the music director M. S. Vishwanathan, Sonnathu Neethana song was from the movie Nenjil Or Aalayam. Playback singer(s) P. Susheela recordered it and the lyric for the Sonnathu Neethana song was written by Lyricist Not Known and the movie was released in the year 1962.
Comments