top of page

Pattukku Paattu Eduthu | MSV Tribute | old Melody Song | Cover by Sabitha & Mukesh with Lyrics Tamil

Writer's picture: tamilpettai tamilpettai

பெ: பாட்டுக்குப் பாட்டெடுத்து

நான் பாடுவதைக் கேட்டாயோ


துள்ளி வரும் வெள்ளலையே

நீ போய்த்

தூது சொல்ல மாட்டாயோ

பாட்டுக்குப் பாட்டெடுத்து

நான் பாடுவதைக் கேட்டாயோ

துள்ளி வரும் வெள்ளலையே

நீ போய்த்

தூது சொல்ல மாட்டாயோ



ஆ: கொத்தும் கிளி இங்கிருக்க

கோவைப் பழம் அங்கிருக்க..


கொத்தும் கிளி இங்கிருக்க

கோவைப் பழம் அங்கிருக்க

தத்தி வரும் வெள்ளலையே

நீ...போய்

தூது சொல்ல மாட்டாயோ

தத்தி வரும் வெள்ளலையே

நீ...போய்

தூது சொல்ல மாட்டாயோ

கொத்தும் கிளி இங்கிருக்க

கோவைப் பழம் அங்கிருக்க

தத்தி வரும் வெள்ளலையே

நீ போய்

தூது சொல்ல மாட்டாயோ


பெ: இளம் வாழைத்

தண்டா..க


எலுமிச்சம்

கொடியா..க

இருந்தவளை

கைப் பிடிச்சு

இரவெல்லாம்

கண் முழிச்சு

இல்லாத

ஆசையில

என் மனச

ஆடவிட்டான்...

ஆடவிட்ட

மச்சா..னே

ஓடம் விட்டு

போனா..னே

ஓடம் விட்டு

போனா..னே...ஹோய்

ஓடம் விட்டு

போனா..னே

ஊரெங்கும் தூங்கையிலே

நான் உள்மூச்சு

வா..ங்கையிலே

ஓசையிடும்

பூங்கா..ற்றே

நீ தான்

ஓடி போய்ச்

சொல்லி விடு


ஆ: மின்னலா...ய்

வகிடெடுத்து


மேகமா..ய்த்

தலைமுடித்து

பின்னலா..ய்

ஜடைபோ..ட்டு

என் மனச

எடைபோ..ட்டு

மீன் புடிக்க

வந்தவள

நான் புடிக்க

போனேனே

மை எழுதும்

கண்ணா..லே

பொய் எழுதிப்

போனா..ளே

ஆசைக்கு ஆசை வச்சேன்

நான் அப்புறந்தான்

கா..தலிச்சேன் ஹோய்

ஓசையிடும் பூங்காற்றே

நீ..தான்

ஓடிப்போ..ய்

சொல்லிவிடு


பெ: வாழைப் பூ

திரி எடுத்து


வெண்ணையிலே

நெய் எடுத்து

ஏழை மனக்

குடிசையிலே

ஏத்தி வச்சா..ன்

ஒரு விளக்கு

ஏத்தி வச்ச

கைகளிலே

என் மனச

நான் கொடுத்தேன்

நெஞ்சு மட்டும்

அங்கிருக்க

நான் மட்டும்

இங்கிருக்க

நான் மட்டும்

இங்கிருக்க ...

நான் மட்டும்

இங்கிருக்க

ஆ: தாமரை அவளிருக்க


இங்கே சூரியன் நானிருக்க


சாட்சி சொல்லும் சந்திரனே

நீ போய்

தூது சொல்ல மாட்டாயோ

இருவரும்: பாட்டுக்குப் பாட்டெடுத்து


நான் பாடுவதைக் கேட்டாயோ


சாட்சி சொல்லும் சந்திரனே

நீ போய்

தூது சொல்ல மாட்டாயோ


The sad song,"Paatukku Patteduthu" sung by TM Soundararajan and P Susheela from the film Padagotti. Cast: MGR, Sarojadevi Music: Viswanathan Ramamurthy Lyrics: Vaalee Director: T Prakash Rao Producer: G N Velumani Release : 1964

14 views0 comments

Comments


bottom of page