
தெய்வம் எனதருகில் இருப்பதை உணர்கிறேன்
என்தாய்மடிப்பற்றி துகிலவே தொடர்கிறேன்
வரம் தரும் வலிமை இருக்குதே உன்னிடம்
துகில் வரம் தருகிறாய் வருடியே என்னிடம்
பிடித்து போகுது உந்தன் இசை தாலாட்டு
படிகிறேன் உன்மடியில் முடிவிலா இசை கேட்டு

கனவிலே வருகிறாய் கலங்கரை விளக்கமாய்
துகில் மொத்தம் தருகிறாய் கருவறை அமைதியாய்
அறிகுறி கொள்கிறேன் திடிக்கிடும் துகில்கையில்
நிம்மதி பெறுகிறேன் உன் வாசனை நுகர்கையில்
தாலிசை நீளுது முழுநேர பகுதியாய்
உன் துகிலையே மறக்கிறாய் என்மீதான பாசம் மிகுதியால்
உணர்கிறேன் அம்மா உனதன்பை...................................................................
Comments