top of page
Writer's picturetamilpettai

திருமண வாழ்த்து கவிதை - வாழ்வாங்கு வாழியவே!


மூவுலக மூர்த்திகளும்

முகமலர அருள்பொழிய !


வானுலக தேவர்களும்

வந்தமர்ந்து வாழ்த்துபாட !


ஆன்றோரும் சான்றோரும்

ஆசிமழை தூவி வாழ்த்த !


ஈன்றோர்கள் இன்முகத்தில்

ஈடில்லா மகிழ்ச்சிபொங்க


இனியதோர் மணவாழ்வில்

இணையும் இரு நெஞ்சங்கள் .


அறுகு போல் வேரூண்றி

ஆல் போல் தழைத்து

இன் தமிழ்ச்சுவைபோல் இயைந்து

ஈகை பல புரிந்து

உற்ற தமிழ் மக்களோடு - எவர்க்கும்

ஊறு விழைவிக்காது

என்பும் பிறர்க்காய் - எண்ணி

ஏனிந்த யாக்கை பெற்றோமென்றே

ஐயம் தெளிந்த பின்னர்

ஒற்றுமையாய் உறவாடி

ஓங்கார ஒலியெழுப்பி

ஒளடதங்கள் நீங்க

ஃதோடு வாழ்வாங்கு வாழியவே!



9 views0 comments

Comments


bottom of page