உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!
மனம்போல மாங்கல்யம்
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய
மலர்மாலை சூடி
மகிழ்வோடு வாழ்க!
அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!
வற்றாத வளம் .....
குறைவில்லா நலம் ......
வழுவாத பண்பும் .... என
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திடுக!
என உளமார வாழ்த்துரைக்கும்
அன்பு உள்ளம் .........
Comments