நம்பிக்கையில்தான்
நகருகிறது
வாழ்க்கை …!
உன்
நாடி ..நரம்புகளில்
இரத்தவோட்டத்தை
மாற்று…
இளமையாய்
நம்பிக்கையை
ஊற்று…
வறண்ட பொழுதினில்
வாழ்வின் எல்லைவரை
செல்லும் மனது …
அப்பொழுதினில்
நாளைய உலகினை
நம்பிக்கை வேர்களே
நன்றியுடன் உரைக்கும்
விடிவோம் என்றுதானே
வீழ்கிறான் சூரியன் …
வளர்வோம் என்றுதானே
தேய்கிறான் சந்திரன் …
வீழ்ச்சியும்…
தேய்தலும்…
தேகத்திற்குத்தான்..?
ஆனால்
மனதிற்கு …!
தவறெனில்
'தாய்' புவியின்
தலைவிதியை
மாற்றிவிடு …
'தரணி' ஆள
தளிர்களுக்கு
தன்னம்பிக்கை
ஊற்றிவிடு …
காயங்கள்
ஆறிவிடும்…
கவலைகள்
ஓடிவிடும்…
மாற்றங்கள்
துளிர்விடும் …
மறைவுகள்
உயிர்பெறும்…
மனித மனம்
என்று
ஒளிபெறும் …?
நாளைய
உலகினை
வழிநடத்த
வந்தவன்
நீ …!
நம்பிக்கை…வை
நம்பிக்கையில் தான்
நகருகிறது
வாழ்க்கை …!
Comentarios