வேதனைகளும் சாதனைகளாய் மாறும்
விடா முயற்சி என்னும் விதை இருந்தால்…!
கலங்கிய நீர் கூட கண நேரத்தில் தெளவாகும்…!
நீர் போன்ற நெஞ்சைக் கொண்டிரு….
எப்பாத்திரத்திற்கும் ஏற்றால் போல்
உன் பாத்திரம் அமையும்படி….!
திண்ணிய நெஞ்சம் கொண்டிரு!
திகட்டாத காதல் கொண்டிரு…!
திமிராத அமைதியை வேண்டிரு!
எண்ணியனவெல்லாம் ஏகபோகமாய் முடியம்
ஏளனங்களை மதியாத ஏற்புடை நெஞ்சமிருந்தால்!!
வறியவனாக பிறந்துவிட்டால்
வாழ்வதற்கு வழி இல்லையா!
வறுமையை வழியனுப்பி
வாழ்ந்தவர்கள் யாரும் இல்லையா??…
விழுவது வெற்றி அல்ல….
விழுந்தவுடன் எழுவது தான் விஸ்வரூப வெற்றி!!….
விழுவது இருமுறை ஆனாலும்
எழுவது மும்முறையாகட்டும்...!
திடமான முடிவெடு!
திறமையுடன் முன்னேறு!!
கடின உழைப்பை காணிக்கையாக்கு
வருங்காலம் உன்னோடு!!!!
வசந்தகாலம் உன் வாழ்க்கையோடு.
Comments