top of page

தங்கைக்கு அண்ணன் வாழ்த்து - கவிதை

Writer's picture: tamilpettai tamilpettai

திமிராய் திரிந்த

கட்டிளம் காளையை

கடிவாளமிட கடவுள்

அனுப்பிய உன்னத

உறவு நீ.



முழங்கால் தேய

மூக்கு ஒழுக

நாக்கு நவிழ

நடை பயின்ற

அந்த நாள் முதல்

நீ அண்ணா என்று

அழைத்தது யாருக்கும்

கேட்டிடாத சொல் அது !!!



ஆம் !!! மூன்று வயது

பெரியவன் ஆனாலும்

டேய் என்று நீ

அழைக்கும் போது தான்

பாசம் அது

நெஞ்சை முட்டும் !!!



திண்ணையில் நீ

தினம் தினம் தவழையில்

குவளையில் நீர் கொண்டு

குளம் கட்டி நாம் குளித்தது

கதையல்ல நிஜம் !!!!


சித்தி குழந்தை முதல்

உன் தங்கை குழந்தை வரை

ஒய்யாரமாய் செய்யும்

உனது ஒப்பனைகள்

ஓவியனின் கைகளுக்கே

வெட்ககேடு !!!!


மாமனுக்கு மனம் இசைந்து

தாய் பிறந்த வீட்டிலே

நீ தாயாக போகையிலே

பச்சிளம் குழந்தை நீ !!!




இருபது வயதிலே

இரு மடங்கு பண்பட்டவள் நீ !!!!

நாற்பது வயதிலே

நாடாள போபவள் நீ !!!

திருமணம் ஆனாலும்

தினம் நீ குழந்தை தான் !!

உன் அகவை ஆறு தான் !!!


கொஞ்சும் மழலை

உன்னில் தஞ்சம் ஆகி

விண்ணை விஞ்சி

உன் வாழ்வு சிறக்க

வாழ்த்தும் அன்பு

அண்ணன்

11 views0 comments

Comments


bottom of page